சிறகு
  • மூவர் விடுதலைக்கான போராட்டம்

    ஆகஸ்டு 20, 2011

    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி  கலிபோர்னியா பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நகரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மரண தண்டனைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பிரிமான்ட் சென்ட்ரல் பூங்காவை சுற்றி வலம் வந்தனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.

    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் இந்திய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

Comments are closed.
-->