சிறகு

சனவரி 2011: இளந்தமிழரணிக்கான கருத்தாக்கம் சனவரி 29 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு ஏழு நண்பர்களால் அமெரிக்க கலிபோர்னியா மாகாணம் சான் ஒசே நகரில் உருவாக்கப்பட்டது. இன்று இளந்தமிழரணி உறுப்பினர்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களிலும், நார்வே, சிங்கப்பூர், துபாய் போன்று பல நாடுகளிலும் மற்றும் தமிழகத்திலும் பரவி இருக்கின்றனர்.

மார்ச் 2011: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து காக்கக் கோரி கையொப்ப வேட்டை அமெரிக்காவின் பல இடங்களில் நடத்தப்பட்டது.  தமிழகத்திலும் இக்கோரிக்கைக்கான  கையொப்ப வேட்டை நடத்தப்பட்டது. சேகரிக்கப்பட்ட கையொப்பங்களுடன் கோரிக்கை மனு ஐ.நா. சபை மனித உரிமை அமைப்பிடம் சமர்பிக்கட்டுள்ளது.

மே 2011: நம் தமிழக  மீனவர்கள் சந்தித்து வரும் துன்பங்களுக்கு முக்கிய காரணமான கட்சத்தீவை மீட்பதற்கான காரியங்களை ஊக்குவித்து வருகிறது. கட்சித் தீவு மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீதையின் மைந்தன் அவர்களின் புத்தகம் (KATCHATHEEVU – THE BETRAYED INDIAN TERRITORY) வெளியிட உதவி இருக்கிறது. மேலும் அவர் உதவியுடன் இது தொடர்பாக ஒரு காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி மற்றும் புத்தகமும் அனைத்து வட மாநில அரசியல் மற்றும் ஊடக தொடர்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மீனவர் கிராமங்களில் இந்த காணொளி திரையிடப்படுவதர்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

மே 2011: தமிழர்களின் துயரங்களுக்கு முக்கிய காரணம் தமிழர் நலனில் அக்கறையுள்ள ஊடகங்கள் இல்லை என்பதே நாம் அறிந்த விடயம். இதைப் தீர்ப்பதற்கு முதற்படியாக சிறகு (www.siragu.com) என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டுள்ளது. சிறகு இணையத்தை ஒரு செய்தி ஊடகமாக முன்னேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஜூலை 2011: தமிழகத்தில் இலங்கை புறக்கணிப்பு பரப்புரைகள் தொடங்குவதில் முக்கிய பணியாற்றியது.

ஆகஸ்டு 2011: ஆகஸ்டு 20, 2001 அன்று பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி  பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டது.

செப்டம்பர் 2011: செப்டம்பர் 17, 2011 அன்று தமிழ் கலாச்சார முறையில் குழந்தை வளர்ப்பு கருத்தரங்கம் கலிபோர்னியா சான் ஒசே நகரில் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் தமிழ் கலாச்சார முறையில் குழந்தை வளர்ப்பதில் நாம் சந்திக்கும் சிக்கல்களையும் அதற்கான எளிமையான தீர்வுகளையும் பகிர்ந்து கொள்ள இந்த கருத்தரங்கம் பேருதவியாக அமைந்தது.