சிறகு

சமுகத்தில் இருக்கும் பிரட்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சமுக முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் பொது மக்கள், துறை வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூக சிந்தனை உடையவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் (conferences) நடத்தும். இதன் மூலம் சமுக முன்னேற்றத்திற்கான தீர்வுகளை வெள்ளை அறிக்கையாகவும், திட்ட வரையறைகளாகவும் மக்களிடமும் அரசிடமும் பரிசீலனைக்கு முன்வைக்கும்.

அரசு அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் முக்கிய அரசியல் தலைவர்களிடமும், சர்வதேச அமைப்புகளிடமும் கோரிக்கைகள் வைத்து வலியுறுத்தும்.

சமுக பிரச்சினைகளை விளக்கி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நேரடியாக பரப்புரைகளில் ஈடுபடும். பரப்புரைகளுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் காணொளிகள் தயாரிக்கப்படும்.

தமிழர்களின் பிரச்சினைகளை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் எடுத்துச் சென்று தீர்விற்காக பாடுபடும்.

தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது சட்டரீதியாக போராடும்.

தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களிடம் உண்மைகள்  கொண்டு செல்லும்.

இளந்தமிழரணி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த போராட்டங்களிலும் ஈடுபடாது.

இளந்தமிழரணியின் அனைத்து செயல்களும் அந்தந்த நாட்டு அரசு சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

தமிழர்களின் நலன் சார்ந்தது இயங்கும் ஊடகங்களை ஊக்குவிக்கும், மேலும் தமிழர்களின் நலனிர்கான ஊடகங்களை உருவாக்குவதற்கும் பாடுபடும்.