சிறகு

இளந்தமிழரணி உலக தமிழர்களின் சமுக முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு சமுக இயக்கம்.

உலகத் தமிழர்களுக்கானது: இளந்தமிழரணி உலகம் முழுவதும் உள்ள  தமிழர்களின் நலனுக்கு பாடுபடும் அமைப்பு.உலகின் எந்த மூலையில் தமிழர்கள்  பாதிக்கப்பட்டாலும் இளந்தமிழரணி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக  செயல்படும்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் , தனித் தமிழைப் போற்றி வளர்பதற்கும் இளந்தமிழரணி முன்னுரிமை கொடுத்து செயல்படும்.

சமத்துவம்: இளந்தமிழரணி அனைத்து தமிழர்களையும் சக மனிதர்களாக சம உரிமை உடையவர்களாக ஏற்றுக் கொண்டது. சமத்துவம் மீறி எங்கேனும் பிறப்பின் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தின் அடிப்படையிலோ தமிழர்கள் ஒடுக்கப்பட்டால் இளந்தமிழரணி பாதிக்கப்பட்டவரகளுக்கு ஆதரவாக செயல்படும்.

இளந்தமிழரணி மதச்சார்பற்றது. எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல.

அரசியல் கட்சி சார்பற்றது: இளந்தமிழரணி எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு உடையதல்ல.