சிறகு
  • தமிழ் பண்பாட்டு முறையில் குழந்தை வளர்ப்பு

    செப்டம்பர் 17 2011
    இளந்தமிழரணியின் தமிழ் பண்பாட்டு முறையில் குழந்தை வளர்ப்பு கருத்தரங்கம் அமெரிக்கா கலிபோர்னியா சாநோசே நகரில் நடந்தது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அமெரிக்காவில் தமிழ் பண்பாட்டில் குழந்தை வளர்ப்பதில் சந்திக்கும் சிக்கல்களையும் அதற்கான எளிய தீர்வுகளையும் முன்வைத்து பலர் உரையாற்றினர். திரு. தியாகராஜன் வரவேற்புரையாற்றி தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கை தொடங்கிவைத்தார். திருமதி நளாயினி, திருமதி நிர்மலா, திருமதி பாத்திமா, திருமதி ஹேமாமாலினி, திரு.தில்லை குமரன், திரு.கார்த்திகேயன் ஆகியோர் பல பயனுள்ள எளிமையான வழி முறைகளை விளக்கி உரையாற்றினர். தமிழார்வலர் திரு. பெரியண்ணன் சந்திரசேகரன் தொலை கலந்துரையாடல் மூலம் உரையாற்றியது இக்கருத்தரங்கத்தின் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைந்தது. திரு விவேக் கணேசன் கருத்தரங்கை தொகுத்து வழிநடத்தினார். கலந்துகொண்ட பலர் இது போன்ற பயனுள்ள கருத்தரங்குகளை தொடர்ச்சியாக இளந்தமிழரணி நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    கருத்தரங்கில் தமிழார்வலர் திரு. பெரியண்ணன் சந்திரசேகரன் பகிர்ந்துகொண்ட காட்டல்.

    கருத்தரங்கத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கிய தவல்கள்

    • பெற்றோர்களின் மனப்பான்மையே இதில் பங்கு வகிக்கும் பெரிய சிக்கல் மற்றவை யாவும் சிறிய தடைகளே. தாழ்வு மனப்பான்மை, அறியாமை, உறுதியின்மை ஆகியவையே இந்த மனப்பான்மைக்கு காரணங்கள். இவற்றை போக்க செயலாற்றவேண்டும்.
    • தமிழர் பண்பாட்டில் குழந்தை வளர்ப்பதற்கு குழந்தைகளிடம் தமிழில் பேசுவதே முதல் முக்கிய செயல்.
    • தமிழ் பேச்சு மொழி மட்டுமே நமது பண்பாடுகளை முழுமையாக கொண்டுவராது.
    • நமது பண்பாட்டில் முக்கிய கூறுகளான ஒழுக்கம், மானம், மரியாதை, இசை, உடை, உணவு ஆகியவற்றையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.
    • குழந்தைகள் தமிழில் பேசி, விளையாடும் வாய்ப்புகளை உருவாக்கும் பல நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
    • தமிழர்களின் வரலாறு, காப்பியங்கள், கதைகள் ஆகியவற்றை நம் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் கலந்து விரும்பும் வகையில் எளிமையாக கொடுக்கவேண்டும்.
Comments are closed.
-->