சிறகு
  • தமிழர் எழுச்சி விழா

    சனவரி 22, 2012:

    இளந்தமிழரணி நடத்திய தமிழர் எழுச்சி விழா சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி மில்பிடாசு நகர பொது நூலக அரங்கத்தில் சிறப்பாக நடந்தது.

    திரு. தியாகராஜன் பிற்பகல் 2:30 மணிக்கு வரவேற்புரையாற்றி விழா நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார்.

    திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து  தமிழகத்தில் எழுச்சி தீயை பரப்பிய மாவீரன் முத்துகுமார் அவர்களின் தியாகத்தை பற்றி உணர்வு பூர்வமாக உரையாற்றினார்.  தன் உயிர் கொடுத்து மூவர் விடுதலைக்கு போராடிய வீரமங்கை தோழர் செங்கொடி அவர்களின் தியாகத்தையும் போற்றி திரு.ஆறுமுகம் பேச்சிமுத்து உரையாற்றினர்.

    மாவீரன் முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம் “சனவரி 29″ முன்னோட்டம் திரையிடப்பட்டது. பின்னர் அனைவரும் மாவீரன் முத்துக்குமார் மற்றும் வீரமங்கை தோழர் செங்கொடி படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

    அணு  மின் துறை ஆராய்ச்சியாளர் திரு.சசிகுமார் கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் உண்டாகும் நன்மை தீமைகளை விளக்கி உரையாற்றினார். கூடங்குளம் அணுமின் நிலையம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை அனைவரும் எளிதாக புரியும்படி தெளிவாக விளக்கியது அவரது உரையின் சிறப்பாக இருந்தது.

    திரு. மணி மணிவண்ணன் அவர்களின் கணினித் தமிழ் பற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. கிரந்த எழுத்துக்கள் தொடர்பாக ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் நேர்ந்த சிக்கலை எவ்வாறு அறிவு பூர்வமாக போராடி வென்றோம் என்பதை அவர் விளக்கியது அனைவரையும் பெருமை கொள்ளச்செய்தது.

    திருமதி. நளாயினி புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி உரையாற்றினார். அன்பும் அமைதியும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அவசியம் என்பதை மையமாக வைத்து அவர் ஆற்றிய உரை அனைவரின் மனம் தொடும் வகையில் அமைந்தது.

    திரு. சாகுல் அமீது இளந்தமிழரணி அமைப்பின் பின்னணி, கொள்கைகள், செயல்பாடுகள் பற்றி விளக்க உரையாற்றினார்.

    திரு. குமார் குமரப்பன் அவர்கள் தமிழர்களின் குறிப்பாக தமிழ் உணர்வாளர்களின் அணுகுமுறை, அதில் தேவையான சில மாற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார். தமிழ் உணர்வாளர்கள் பல குழுக்களாக பிரிவதை  தவிர்ப்பதன் அவசியத்தையும் அதை தீர்ப்பதற்கான எளிதான வழிகளையும் விளக்கினார்.

    திரு. செல்வராசு முருகையன் மாவீரன் முத்துகுமார் ஆவணப்படம் தயாரித்த போது தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். மூவர் விடுதலைக்கான போராட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

    திரு. விவேக் கணேசன் அரசியலின் அடிப்படைகள் மற்றும் அரசியலின் வெவ்வேறு வடிவங்களைப் பற்றி உரையாற்றினார். போராட்ட அரசியல் உடன் அரசியலின் மற்ற வடிவங்களான அரசிற்கான கொள்கைகள் உருவாக்குதல் மற்றும் வியூகங்களை உருவாக்குதல், திட்டமிடல் போன்றவற்றிலும் தமிழர்கள் கவனம் செலுத்தவது அவசியம் என்பதை விளக்கினார்.

    இறுதியில் திரு. தியாகராஜன் நன்றி உரையாற்றி நிகழ்வை முடித்துவைத்தார்.

    விழா நிகழ்படங்கள் பதிவுகள்

    திரு. தியாகராஜன் + திரு. ஆறுமுகம் உரைகள்

    திரு.சசிகுமார் அல்லிதுரை உரை 1

    திரு.சசிகுமார் அல்லிதுரை உரை 2

    திரு. மணி மணிவண்ணன் உரை 1

    திரு. மணி மணிவண்ணன் உரை 2

    திருமதி. நளாயினி குணநாயகம் உரை

    திரு. சாகுல் அமீது உரை

    திரு. குமார் குமாரப்பன் உரை

    திரு. செல்வராசு முருகையன் உரை 1

    திரு. செல்வராசு முருகையன் உரை 2

    திரு. விவேக் கணேசன் உரை

    விழா நிழற்படங்கள் தொகுப்பு

Comments are closed.
-->